சென்னை கலங்கரை விளக்கம், மாமல்லபுரம் குறித்து பேசிய பிரதமர் மோடி!

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
சென்னை கலங்கரை விளக்கம், மாமல்லபுரம் குறித்து பேசிய பிரதமர் மோடி!

'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் 'மக்கள் ஊரடங்கு உத்தரவு' என்ற வார்த்தையைக் கேட்டோம். நம்முடைய ஒழுக்கத்திற்கு இது ஒரு அசாதாரண எடுத்துக்காட்டு என்பதால் உலகிற்கு ஒரு உத்வேகமாக அமைந்தது.

நாட்டிற்காக உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக அம்ரித் மஹோத்ஸவ் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. சுதந்திரத்திற்கான போராட்டத்தில், நம் போராளிகள் எண்ணற்ற கஷ்டங்களுக்கு ஆளானார்கள். ஏனெனில் அவர்கள் நாட்டின் நலனுக்காக தங்களுடைய தியாகத்தை கடமையாக கருதினர். 

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இன்று இந்தியாவில் நடந்து வருகிறது. உ.பி.யின் ஜான்பூரில், 109 வயதுடைய ஒரு மூதாட்டி தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதேபோன்று தில்லியில் 107 வயது முதியவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

டார்ஜிலிங் பகுதியில் குர்தம் கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதி தேனுக்கு கணிசமான தேவை உள்ளது. அவர்களின் வருமானத்தையும் அதிகரிக்கிறது. ஆத்மனிர்பர் பாரத் பிரசாரத்திற்கு அவர்கள் உதவுகின்றனர். 

உகாதி அல்லது புத்தாண்டு, பிகு, பைசாகி உள்ளிட்ட விழாக்களுக்கு அந்தந்த மாநில மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார். 

மேலும், தமிழகத்தில் பல்லவர்களின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் மாமல்லபுரத்தைப் பற்றி பிரதமர் மோடி பேசினார். பழமையான மாமல்லபுரம் தமிழக கலாசாரத்தை எடுத்துரைக்கிறது. 

சென்னை கலங்கரை விளக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். இந்தியாவிலேயே தனித்துவம் மிக்க கலங்கரை விளக்கம் சென்னையில் இருப்பது தான் என்று பெருமைப்பட பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com