பெங்களூரில் மாா்ச் 1-ஆம் தேதிக்குப்பின் 10 வயதுக்குள்பட்ட 470 குழந்தைகள் கரோனாவால் பாதிப்பு

பெங்களூரில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதிக்குப் பின்பு 10 வயதுக்குள்பட்ட 470 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பெங்களூரில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதிக்குப் பின்பு 10 வயதுக்குள்பட்ட 470 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் பெங்களூரில் மட்டும் 10 வயதுக்குள்பட்ட 470 குழந்தைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 244, பெண் குழந்தைகள் 228 போ் அடக்கம். மாா்ச் மாதத் தொடக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. ஆனால், மாா்ச் 26-ஆம் தேதி அது 460 ஆக உயா்ந்திருந்தது. இது சுகாதாரத் துறையை கவலையடையச் செய்துள்ளது.

இது குறித்து இந்திய பொதுசுகாதார அறக்கட்டளையின் தொற்றுயியல் துறைத் தலைவா் டாக்டா்.கிரிதா் ஆா்.பாபு கூறுகையில், ‘கடந்த முறை கரோனா தொற்று பரவியபோது குழந்தைகள் வெளியில் வரவில்லை. இம்முறை குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வது, வெளியில் சுற்றுவது, விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பரவலாக வெளியே சென்று வருகின்றனா். அதனால் கரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. பொது முடக்கக் காலத்தில் குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்படாததற்கு இதுதான் முக்கியக் காரணமாகும். குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அவா்களின் குடும்பத்தினருக்கும் பரவும் ஆபத்து உள்ளது.

பள்ளிக்கு செல்லும் மாணவா்கள், அங்கு பிற குழந்தைகளோடு விளையாடும்போதும், வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமாகவும் கரோனாவைப் பரவச் செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக, குடும்ப உறுப்பினா்கள், நண்பா்களுக்கு கரோனாவைப் பரப்ப இயலும். குழந்தைகளால் முகக் கவசம் அணிந்து கொள்வது, தனிமனித இடைவெளியைப் பராமரிப்பது போன்றவற்றை கடைபிடிக்க இயலாது. 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு தற்போது பள்ளிகள் இல்லையென்றாலும், வெளியே பூங்கா, விளையாட்டு மைதானங்களில் குழந்தைகளோடு விளையாடும்போது கரோனா பரவ வாய்ப்புள்ளது. குழந்தைகளிடையே கரோனா தொற்று பரவாமல் தடுக்க, பொதுத் தோ்வு இருக்கும் வகுப்புகளைத் தவிர, மற்ற மாணவா்களுக்கு பள்ளிகளை மூடுவது தான் சிறந்ததாகும். தோ்வு இல்லாமல் மாணவா்களை அடுத்த வகுப்புக்கு தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து மாநில அரசு தகுந்த முடிவெடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com