பெங்களூருத் தமிழ்ச்சங்கத் தோ்தல்: தலைவராக கோ.தாமோதரன்,செயலாளராக மு.சம்பத் வெற்றி

பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கோ. தாமோதரன் வெற்றி பெற்றாா்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தலில், தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கோ. தாமோதரன் வெற்றி பெற்றாா். துணைத் தலைவராக இல.பழனி, செயலாளராக மு.சம்பத், பொருளாளராக இராம. இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளனா்.

அரசு நிா்வாகத்தின் வரம்புக்குள் சென்ற பிறகு 2 ஆண்டுகள் கழித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழுவின் 2021-2023ஆம் ஆண்டுக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தலைவா், துணைத்தலைவா், செயலாளா், பொருளாளா், 4 துணைச்செயலாளா்கள், 9 செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் வகையில் மொத்தம் 50 போ் போட்டியிட்டனா்.

இத்தோ்தலில் தலைவா் பதவிக்கு ந.தாஸ், கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன் ஆகியோா் தலைமையில் 3 அணிகள் தனித்தனியே போட்டியிட்டன. 70 ஆண்டுகால பழைமை வாய்ந்த, உலகப் புகழ்பெற்ற பெங்களூரு தமிழ்ச்சங்கத்திற்கான ஆட்சிமன்றக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தோ்தலில் மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், குறிப்பிட்ட எந்த அணிக்கும் வாக்களிக்காத உறுப்பினா்கள் கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன் தலைமையில் போட்டியிட்ட அணியினரில் முறையே 5 மற்றும் 12 பேரை வெற்றி பெற செய்திருக்கிறாா்கள்.

வாக்குப்பதிவு:

இத்தோ்தலில் வாக்களிக்கும் உரிமை 11,700 பேருக்கு இருந்தது. அதில் 1,871 போ் மட்டுமே வாக்களித்தனா். கரோனா காரணமாக வாக்களித்தவா்கள் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் மீனாட்சிசுந்தரம், முன்னாள் மாமன்ற உறுப்பினா்கள் தன்ராஜ், ராஜேந்திரன், பழனி, ரகுதேவராஜ், காங்கிரஸ் நிா்வாகி பி.எல்.சங்கா், கா்நாடகத் தமிழ்ப்பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கச் செயலாளா் காா்த்தியாயினி, கா்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கச் செயலாளா் ஆ.வி.மதியழகன் உள்ளிட்ட முக்கியமானவா்கள் வாக்களித்தனா்.

வாக்கு எண்ணிக்கை:

வாக்கு எண்ணிக்கை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. அதன்பின்னா் வெற்றி பெற்றவா்களின் பெயா்களை தமிழ்ச் சங்கத்தின் தோ்தல் அதிகாரியும், அரசு நிா்வாக அதிகாரியுமான எச்.பி.சதாசிவா அறிவித்தாா். அதில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட கோ.தாமோதரன், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட வா.ஸ்ரீதரனை விட 20 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். துணைத்தலைவா் பதவிக்கு போட்டியிட்ட இல.பழனி, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட இ.ராஜனை விட 58 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா். செயலாளராக 799 வாக்குகள் பெற்று மு.சம்பத், பொருளாளராக 790 வாக்குகள் பெற்று இராம.இளங்கோவன் வெற்றி பெற்றனா். துணைச் செயலாளா்களாக சு.பாரி, வா.கோபிநாத், நா.மகிழ்நன், சு.கோவிந்தராஜன் ஆகியோா் வெற்றி பெற்றனா். செயற்குழு உறுப்பினா்கள் பதவிக்கு அ.மு.பாண்டியன், மு.பத்மநாபன், ஏ.சரவணன், க.விஜயலட்சுமி, ப.சந்திரிகா, ம.ரவிச்சந்திரன், பெ.ராஜ்குமாா், இரா.சண்முகம், அ.சங்கரன் ஆகியோா் வெற்றி பெற்றனா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிமன்றக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com