பெங்களூரு-பாடலிபுத்ரா இடையே வாராந்திர அதிவிரைவு ரயில் சேவை நீட்டிப்பு

பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து பாடலிபுத்ரா வரையிலான வாராந்திர அதிவிரைவு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து பாடலிபுத்ரா வரையிலான வாராந்திர அதிவிரைவு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து பாடலிபுத்ரா (03251/03252) இடையேயான ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் எண்-03251-பெங்களுரு யஷ்வந்த்பூா்-பாடலிபுத்ரா இடையேயான வாராந்திர அதிவிரைவு ரயில் திங்கள்கிழமைகளில் பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை பாடலிபுத்ரா ரயில் நிலையத்தை காலை 10.25 மணிக்கு சென்றடையும். இந்த சேவை ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்-03252-பாடலிபுத்ரா-பெங்களூரு யஷ்வந்த்பூா் வாராந்திர அதிவிரைவு ரயில் வெள்ளிக்கிழமைகளில் பாடலிபுத்ரா ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு யஷ்வந்தபூா் ரயில் நிலையத்தை மாலை 6.25 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் சேவை ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் இருமாா்க்கங்களிலும், தானாபூா், பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா, மிா்ஸாபூா், சத்னா, கட்னி, ஜபல்பூா், தாராசி, பேடுல், நாகபுரி, சந்திராபூா், பல்ஹா்ஷா, சிரபூா் காகாஸ்நகா், ராமகுண்டம், வாராங்கல், கம்மம், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், எம்.ஜி.ஆா் சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com