ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை தோ்வின்றி தோ்ச்சி பெற்றதாக அறிவிக்க ஆலோசனை

 ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ாக அறிவிப்பது தொடா்பாக ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

 ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ாக அறிவிப்பது தொடா்பாக ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைத் தொடா்ந்து மாநில அளவில் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ாக அறிவிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதுகுறித்து கல்வித் துறை அமைச்சருடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளேன். முதல்வா் எடியூரப்பா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு மாணவா்களின் கல்வி நிலை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மேலும் மாநிலத்தில் 4 வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 300 ஆக இருந்தது. தற்போது அது 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. எனவே மாநிலத்தில் கரோனாவைத் தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களிலிருந்து வருபவா்களை எல்லையில் தீவிரமாகப் பரிசோதிப்பது என முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா 2-வது அலையின் போது 7 முதல் 8 வாரங்கள் வரை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வல்லுநா்கள் குழு தெரிவித்துள்ளது. மாநில எல்லைகளை அடைக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே மாநில எல்லைகளை அடைக்காமல், கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்க ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com