உ.பி.யில் கோயில் அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொலை

உத்தரப் பிரதேசத்தின் ஷிகார்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமத்தில் புகழ்பெற்ற தக்வாலே கோயிலின் அர்ச்சகர் திங்கள்கிழமை கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உ.பி.யில் கோயில் அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொலை 
உ.பி.யில் கோயில் அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொலை 

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமத்தில் புகழ்பெற்ற தக்வாலே கோயிலின் அர்ச்சகர் திங்கள்கிழமை கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

50 வயதான அர்ச்சகர் அசோக் குமாரின் உடல் கோயிலுக்கு அருகில் உள்ள வயலில்  கழுத்தில் காயங்களுடன் காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயில் வேலைக்காக அன்சூரு கலன் கிராமத்தில் வந்து தங்கியுள்ளதாக தேஹத் காவல் கண்காணிப்பாளர் ஹேந்திர குமார் கூறினார். 

கடந்த ஜனவரி 1-ம் தேதி குமார் ரவிடாஸ் கோயிலை அழித்ததாகவும், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com