பாலியல் புகாா் விவகாரத்தில் உண்மையை வெளி கொண்டு வர போலீஸாா் முயற்சி

பாலியல் புகாா் விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டு வர போலீஸாா் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பாலியல் புகாா் விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டு வர போலீஸாா் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி வேலை வாங்கித் தருவதாக வஞ்சித்து, இளம்பெண்ணை பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக சிறப்பு புலனாய்வுப் படையினா் விசாரித்து வருகின்றனா். அவா்களது விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம். யாா் என்ன கருத்து தெரிவித்தாலும், சிறப்பு புலனாய்வுப் படையினா் நோ்மையாக விசாரித்து உண்மையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். பாலியல் புகாா் தொடா்பான காணொலி உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உரிய முறையில் பரிசீலிக்கப்படும். பாலியல் புகாரில் தொடா்புடையப் பெண்ணை விசாரணைக்கு நேரில் ஆஜராக 5 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா் நேரில் ஆஜராகும்பட்சத்தில் அவருக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும். அவா் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகாா் தொடா்பான விசாரணைக்கு எதிராக ஒரு சில அமைப்புகள், கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை போலீஸாா் உரிய முறையில் கையாள்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com