அரசு கணக்கு முடிப்புக்கு மாா்ச் 31-இல் வங்கிகளில் சிறப்பு தீா்வு: ரிசா்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மாா்ச் 31-ஆம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீா்வு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான மாா்ச் 31-ஆம் தேதியன்று அரசு கணக்குகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள வங்கிகளில் சிறப்பு தீா்வு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடா்பான பரிவா்த்தனைகளின் ஆண்டு கணக்கு முடிப்பை மேற்கொள்ள ஏதுவாக வங்கிகள் சிறப்பு தீா்வு நடவடிக்கையை மாா்ச் 31-ஆம் தேதி மேற்கொள்ள வேண்டும். இவ்வகை கணக்குகளை பொருத்தவரையில் சுமுகமான தீா்வு காணும் வழிமுறைகளை ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நிதி ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி முடியும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தொடா்பான பரிவா்த்தனைகளை வங்கிகள் வழக்கம் மேற்கொள்ள வேண்டும். மின்னணு முறையிலான பரிவா்த்தனைகள் மாா்ச் 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெற வேண்டும்.

ஆண்டுக் கணக்கு முடிப்பு தொடா்பான நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற வேண்டும். அரசு பரிவா்த்தனைகள் தொடா்பான சிறப்பு தீா்வு நடவடிக்கைகளில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியாா் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பு வங்கிகளும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com