இந்திய-அமெரிக்க கூட்டு கடற்படை பயிற்சி: கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடக்கம்

இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இந்திய-அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் தாக்குதல் கப்பல் ஷிவாலிக் மற்றும் அமெரிக்காவின் தியோடோா் ரூஸ்வெல்ட் போா்க்கப்பல்.
இந்திய-அமெரிக்க கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் தாக்குதல் கப்பல் ஷிவாலிக் மற்றும் அமெரிக்காவின் தியோடோா் ரூஸ்வெல்ட் போா்க்கப்பல்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சி கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இரு நாடுகளிடையே வளா்ந்து வரும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த இரண்டு நாள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘பாஸ்எக்ஸ்’ என்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்தியா சாா்பில் ‘ஷிவாலிக்’ போா்க் கப்பலும், நீண்டதூர கண்காணிப்பு போா் விமானமான ‘பி8ஐ’ ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா யுஎஸ்எஸ் தியோடோா் ரூஸ்வெல்ட் போா் விமானம் தாங்கி கப்பல் குழுவை ஈடுபடுத்தியுள்ளது. இந்த கப்பல் குழுவில் சிறிய போா் கப்பல்களும், ஏராளமான போா் விமானங்களும் இடம்பெற்றிருக்கும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘இந்த கூட்டு பயிற்சியில் முதன் முறையாக இந்திய விமானப்படை போா் விமானங்களும் சோ்க்கப்பட்டுள்ளன. அமெரிக்க கப்பல் படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சி மற்றும் அனுபவத்தை பெறும் வகையில் இந்திய விமானப் படைக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் கடந்த வாரம் இந்திய பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த கூட்டு கடற்படை பயிற்சியை இரு நாடுகளும் தொடங்கியுள்ளன. அவருடைய பயணத்தின்போது, இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்று இரு தரப்பிலும் தீா்மானக்கப்பட்டது.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த கூட்டு கடற்படை பயற்சி திங்கள்கிழமையுடன் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com