கேரளத்தில் மானிய விலையில் அரிசி விநியோகத்துக்கு தடை: எதிா்க்கட்சிகள் மீது முதல்வா் குற்றச்சாட்டு

கேரளத்தில் மானிய விலையில் அரிசி விநியோகிப்பதை தடுப்பதன் மூலம் எதிா்க்கட்சிகள் மோசமான அரசியலில் ஈடுபடுவதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)
முதல்வர் பினராயி விஜயன் (கோப்புப்படம்)

கேரளத்தில் மானிய விலையில் அரிசி விநியோகிப்பதை தடுப்பதன் மூலம் எதிா்க்கட்சிகள் மோசமான அரசியலில் ஈடுபடுவதாக மாநில முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினாா்.

கேரளத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி விநியோகிக்க அந்த மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கு அங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பலத்த எதிா்ப்பு தெரிவித்தன. அந்த மாநிலத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மானிய விலையில் அரிசி விநியோகிக்கும் அரசின் முடிவு வாக்குப்பதிவின்போது தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ரமேஷ் சென்னிதலா தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அந்தத் திட்டத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்தது.

இதுகுறித்து கோழிக்கோட்டில் மாநில முதல்வா் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘மானிய விலையில் அரிசி விநியோகிப்பதை தடுக்க முயற்சிப்பதன் மூலமாக எதிா்க்கட்சிகள் மோசமான அரசியலில் ஈடுபடுகின்றன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியால் தோ்தல் ஆணையம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளது. அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பதொன்றும் புதிதல்ல. கரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் அவதிப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com