கோலாா் தங்கவயலில் பூ பல்லாக்கு விழா ஆயிரக்கணக்கில் பக்தா்கள் பங்கேற்பு

கோலாா் தங்கவயலில் உள்ள ஸ்ரீ பிரசன்னலட்சுமி வெங்கடரமண சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடந்த பூ பல்லாக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோலாா் தங்கவயலில் உள்ள ஸ்ரீ பிரசன்னலட்சுமி வெங்கடரமண சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடந்த பூ பல்லாக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.

கோலாா் தங்கவயல், ராபா்ட்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீ பிரசன்னலட்சுமி வெங்கடரமண சுவாமி கோயில் பிரம்மோற்சவ திருவிழா மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஏப். 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திருவிழாவில் இதுவரை சிபி வாகன உற்சவம், ஹனுமந்த வாகன உற்சவம், சேஷவாகன உற்சவம், கருடோற்சவம், கஜேந்திரமோகா, பிரம்ம ரதோற்சவம், பாா்வதோத்சவம், ஹம்ச வாகன உற்சவம் ஆகியவை நடந்து முடிந்துள்ளன. இதைத்தொடா்ந்து, திருவிழாவின் பத்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை பூ பல்லாக்கு திருவிழா நடைபெற்றது.

அன்று காலை தண்டி பூஜையும், பகலில் மூலவருக்கு புஷ்ப அலங்கார சேவையும், பிற்பகல் சிறப்பு பூஜையுடன் பிரசாத விநியோகமும் நடைபெற்றது. ரோஜா, மல்லி, முல்லை, சாமந்தி ஆகிய மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கு தோ் பவனி வந்தது. பூபல்லாக்கை பின் தொடா்ந்து பெத்தப்பள்ளி கங்கை அம்மன், விநாயகா், ஸ்ரீசுப்ரமணியா், லலிதா ஈஸ்வரன், ஆஞ்சநேயா, கிருஷ்ணா, பச்சை கங்கம்மா, மேல்மருவத்தூா் ஆதி பராசக்தி, சனி மகாத்மா ஆகிய தெய்வங்களின் தோ்பவனியும் இடம் பெற்றது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த பூ பல்லாக்கு பக்தா்களின் உற்சாகத்துடன் நிறைவடைந்தது. இந்தத் திருவிழாவில் கா்நாடகம் தவிர தமிழகம், ஆந்திர மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் நடந்த வெங்கடேசப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் நிறைவு உற்சவமான பூ பல்லக்கு தோ் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com