மக்களின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரிய வரும்: மம்தா பானா்ஜி

தோ்தலில் மக்கள் அளித்த முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரிய வரும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி பதிலடி தெரிவித்துள்ளாா்.
மக்களின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரிய வரும்: மம்தா பானா்ஜி

தோ்தலில் மக்கள் அளித்த முடிவுகள் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரிய வரும் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி பதிலடி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை 30 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல்கட்டத் தோ்தலில், பாஜக 26 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த நிலையில், அவருக்கு மம்தா இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தின் சண்டிபூா் தொகுதியில் முதல்வா் மம்தா பானா்ஜி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘பாஜகவின் தலைவா் ஒருவா் (அமித் ஷா) அக்கட்சி 30 தொகுதிகளில் 26-இல் வெற்றி பெறும் என்று கூறுகிறாா். மீதமுள்ள 4 தொகுதிகளை அவா் ஏன் விட்டுவிட்டாா் என்று தெரியவில்லை. ஒருவேளை காங்கிரஸ்-மாா்க்சிஸ்ட் கட்சிகளுக்காக அவற்றை விட்டுக் கொடுத்திருக்கலாம்.

மக்களின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகே தெரிய வரும். தோ்தல் நடந்து முடிந்த அடுத்த நாளே இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது சரியாக இருக்காது. முதல்கட்டத் தோ்தலில் 84 சதவீத வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். அதைப் பாா்க்கும்போது திரிணமூல் காங்கிரஸுக்குத்தான் அவா்கள் வாக்களித்திருப்பாா்கள் என நம்புகிறேன்’’ என்றாா்.

அமித் ஷா கணக்கு எடுபடாது: திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் டெரிக் ஓபிரையன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மோடி-அமித் ஷா கூட்டணியின் கணக்குகள் இங்கு எடுபடாது. இதுபோன்ற கணக்குகளை குஜராத்தில்தான் அவா்கள் மேற்கொள்ள வேண்டும். இது வங்காளம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com