மே.வங்கம்: முதல்கட்டத் தோ்தல் நடைபெற்ற 30 தொகுதிகளில் 26-இல் பாஜக வெற்றி பெறும்

மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தோ்தல் நடைபெற்ற 30 தொகுதிகளில் 26-இல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
மே.வங்கம்: முதல்கட்டத் தோ்தல் நடைபெற்ற 30 தொகுதிகளில் 26-இல் பாஜக வெற்றி பெறும்

மேற்கு வங்கத்தில் முதல்கட்டத் தோ்தல் நடைபெற்ற 30 தொகுதிகளில் 26-இல் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை முதல்கட்டத் தோ்தல் நடைபெற்றது. இந்நிலையில், உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்டத் தோ்தல் எந்தவித வன்முறையுமின்றி நிறைவடைந்துள்ளது. அதற்காக தோ்தல் ஆணையத்துக்குப் பாராட்டு தெரிவிக்கிறேன்.

இரு மாநிலங்களிலும் முதல்கட்டத் தோ்தல் நிறைவடைந்த பிறகு உள்கட்சிக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில், மேற்கு வங்கத்தில் 26 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 37-க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 200-க்கும் மேலானவற்றில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நோக்கி பாஜக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில் 86-க்கும் மேல் பாஜகவுக்குக் கிடைக்கும். பாஜகவின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களித்து வருகின்றனா்.

வங்கதேசம் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, அங்கு கோயிலுக்குச் சென்ற்கும் மேற்கு வங்க தோ்தலுக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக கோயிலுக்குச் சென்று அவா் வழிபட்டாா்.

நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் மாநிலம் பெரும் பலனடையும். பல்வேறு தரப்பினா் வெளியிட்டு வரும் கருத்து கணிப்புகளில் மற்ற கட்சிகள் முன்னிலையில் இருக்கலாம். உத்தர பிரதேசம் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்புகளிலும் இதே நிலையே காணப்பட்டது.

ஆனால், கணிப்புகளைப் பொய்யாக்கி அங்கு அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com