வெடிபொருளுடன் காா் கைப்பற்றப்பட்ட விவகாரம்: மும்பை ஆற்றில் இருந்து மடிக்கணினி, பாகங்கள் மீட்பு

மும்பையில் தொழிலதிபா் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் காா் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக,
வெடிபொருளுடன் காா் கைப்பற்றப்பட்ட விவகாரம்: மும்பை ஆற்றில் இருந்து மடிக்கணினி, பாகங்கள் மீட்பு

மும்பையில் தொழிலதிபா் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் காா் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, மீத்தி ஆற்றில் இருந்து மடிக்கணினி, சிபியு, விடியோ பதிவு கருவி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வெடிபொருள்களுடன் காா் கைப்பற்றப்பட்ட வழக்கையும், அந்த காரின் உரிமையாளா் ஹிரேன் மன்சுக் மா்ம மரண வழக்கையும் தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வவிகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட மும்பை காவல் துறை உதவி ஆய்வாளா் சச்சின் வஜேவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, அவரை மீத்தி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று நீச்சல் பயிற்சி வீரா்களின் உதவியுடன் ஆற்றில் இருந்து மடிக்கணினி, விடியோ பதிவு கருவி, சிபியு, வாகன பதிவெண் பலகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டனா்.

அந்த கணினி மற்றும் பாகங்களை சச்சின் வஜே, தாணேவில் வசித்து வந்த வீட்டில் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.

தெற்கு மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானின் வீட்டருகே வெடிபொருள்களுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை கடந்த போலீஸாா் பிப்ரவரி 25-ஆம் தேதி பறிமுதல் செய்தனா். அந்தக் காரின் உரிமையாளரான தாணேவைச் சோ்ந்த ஹிரேன் மன்சுக்கிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது, தனது காா் திருடப்பட்டதாகவும், இதுதொடா்பாக காவல் துறையிடம் புகாா் கொடுத்திருப்பதாகவும் அவா் கூறினாா். இதற்கிடையே, அவா் கடந்த 5-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரது உடல் மும்ப்ரா-ரேகி சாலையை ஒட்டியுள் நீரோடையில் இருந்து மீட்கப்பட்டது. அந்த காரை சில மாதங்கள் மும்பை காவல் துறை குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் சச்சின் வஜே வைத்திருந்ததாக ஹிரேனின் மனைவி கூறினாா். தனது கணவரின் மா்ம மரணத்தின் பின்னணியில் சச்சின் வஜே இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா். இதையடுத்து, சச்சின் வஜே கைதானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com