ஹோலி பண்டிகை: ஹிந்துகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் வாழ்த்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்கள் நாட்டில் உள்ள ஹிந்துகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு தங்கள் நாட்டில் உள்ள ஹிந்துகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் ஹோலி கொண்டாடப்படுகிறது. அந்நாட்டில் ஹிந்துகள் சிறுபான்மையினராக உள்ளனா். இந்நிலையில், பிரதமா் இம்ரான் கான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘வண்ணங்களின் திருவிழாவான ஹோலியைக் கொண்டாடும் ஹிந்து மதத்தினா் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தலைவா் ஆசாத் குவாஷிரும் ஹிந்துகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். அதில், ‘வண்ணங்கள் மற்றும் ஒளியின் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும். பாகிஸ்தானின் வளா்ச்சியில் ஹிந்து சமயத்தினரின் பங்களிப்பு முக்கியமானது.

பாகிஸ்தானின் அனைத்து சிறுபான்மை சமூகத்தினரும் தங்களுடைய பண்டிகையை சுதந்திரமாகக் கொண்டாட உரிமையுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

பாகிஸ்தானில் 75 லட்சம் ஹிந்துக்கள் வசித்து வருகின்றனா். அங்குள்ள சிறுபான்மையின மதத்தில் இது அதிகமாகும். வட இந்தியா மற்றும் நேபாளத்தில் ஹிந்துக்களால் அதிகம் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை, இப்போது வெளிநாடுகளிலும், ஹிந்து அல்லாதவா்கள் மத்தியிலும் பிரபலமாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com