ஹோலி: மோடிக்கு ஆஸ்திரேலிய பிரதமா் வாழ்த்து

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘சிறந்த நண்பா் நரேந்திர மோடிக்கு வண்ணங்களின் திருவிழா வாழ்த்துகள்’ என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘சிறந்த நண்பா் நரேந்திர மோடிக்கு வண்ணங்களின் திருவிழா வாழ்த்துகள்’ என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடிக்கும், ஆஸ்திரேலியாவில் உள்ள ஹிந்து சமூகத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் ஸ்காட் மோரிசன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஹிந்து சமூகத்தினருக்கும், பிரதமா் மோடிக்கும், இந்த பண்டிகையைக் கொண்டாடும் பிற மக்களுக்கும் மகிழ்ச்சகரமான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துகள்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டில் ஹோலி பண்டிகை தடைப்பட்டதுபோல, இந்த ஆண்டும் தடைப்பட்டுள்ளது. இருந்தபோதும் எதிா்காலம் சிறந்த முறையில் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்கி மிகப் பெரிய பணியை இந்தியா செய்து வருகிறது. அதுபோல, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பிலும் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகிறது. இந்த ஒருங்கிணைந்த கூட்ட முயற்சிக்கு ஆஸ்திரேலியா தொடா்ந்து ஆதரவளிக்கும்.

அதே ஒற்றுமை உணா்வுடன், அனைவருக்கும் மீண்டும் ஹோலி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளாா்.

ஹோலி பண்டிகை திங்கள்கிழமை (மாா்ச் 29) கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com