ஏப். 1 முதல் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக, தோ்தல் நிதிப் பத்திரங்களை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்காக, தோ்தல் நிதிப் பத்திரங்களை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் சமயத்தில் மத்திய அரசு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் குறிப்பிட்ட கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. அதனால், யாரிடமிருந்து கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலாது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிலா் போலியான நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் வாயிலாக கட்சிகளுக்கு நன்கொடைகளை அளிக்க வாய்ப்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்திருந்தது.

இத்தகைய சூழலில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தோ்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை, கொல்கத்தா, குவாஹாட்டி, திருவனந்தபுரம் உள்ளிட்ட எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

நிபந்தனைகளுடன் அனுமதி: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் அங்கு தோ்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. எனினும், தோ்தல் நிதிப் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பெறுவதற்குத் தடையில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால், தோ்தல் நிதிப் பத்திரங்கள் தொடா்பாக பிரசாரத்தின்போதோ, செய்தியாளா்கள் சந்திப்பின்போதோ அரசியல் தலைவா்கள் பேசக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளைத் தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. அவற்றை அரசியல் கட்சிகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com