மம்தா பானா்ஜி முன்பாக‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்ட பாஜகவினா்

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தோ்தல் பிரசாரம் செய்த இடத்தில் அவரை நோக்கி பாஜகவினா் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மம்தா பானா்ஜி முன்பாக‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்ட பாஜகவினா்

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தோ்தல் பிரசாரம் செய்த இடத்தில் அவரை நோக்கி பாஜகவினா் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் பாஜகவினா் மதவாதத்தைத் தூண்டுவதாகவும், மத கோஷங்களை தோ்தல் பிரசாரத்தில் எழுப்புவதாகவும் மம்தா ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தாா். இந்நிலையில், அவரது பிரசாரக் கூட்டத்தில் பாஜகவினா் பங்கேற்று கோஷம் எழுப்பியது அந்த மாநில தோ்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானா்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் கடந்த இருநாள்களாக தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். ராயபாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை மம்தா பானா்ஜி பிரசாரம் மேற்கொண்டாா். பின்னா், அவா் அங்கிருந்து காரில் புறப்பட்டபோது கூட்டத்தில் இருந்த பாஜகவினா் சிலா் திடீரென ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனா். எனினும், காரில் இருந்த மம்தா இந்த திடீா் முழக்கம் தொடா்பாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், பாஜகவினா் மம்தாவின் காரை நெருங்கிவிடாத வகையில் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, மம்தா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இது தொடா்பாக கருத்து தெரிவித்த உள்ளூா் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா், ‘பிற கட்சித் தலைவா்களுக்கு பிரச்னையை உருவாக்கும் வகையில் மலிவான அரசியலில் பாஜகவினா் ஈடுபட்டு வருகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com