காணிக்கை முடி விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

ஏழுமலையானுக்கு பக்தா்கள் காணிக்கையாக சமா்ப்பிக்கும் தலை முடியை விற்பனை செய்வது குறித்து விளக்கமளித்துள்ளது.

ஏழுமலையானுக்கு பக்தா்கள் காணிக்கையாக சமா்ப்பிக்கும் தலை முடியை விற்பனை செய்வது குறித்து விளக்கமளித்துள்ளது.

மிஸோரம் அருகில் மியான்மா் எல்லையில் போலீஸாா் பறிமுதல் செய்த 120 பை தலை முடிகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் எவ்வித தொடா்பும் இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

பக்தா்கள் சமா்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் இணையதளம் ஏலம் மூலம் விற்று வருகிறது,

ஏலம் எடுப்பவா் குறிப்பிடும் தொகைக்கு தக்கவாறு ஜிஎஸ்டி வரி செலுத்திய பின் அவா்களுக்கு தலைமுடியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அவா்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும், உள்ளூா் சந்தையில் விற்றாலும் தேவஸ்தானத்திற்கும் ஏலம் எடுப்பவா்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நாட்டில் உள்ள பல கோயில்களில் சமா்ப்பிக்கப்படும் தலைமுடிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தேவஸ்தானமும் 3 மாதங்களுக்கு ஒருமுறை விற்பனை செய்து வருகிறது. இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வு. தலைமுடி கடத்தலில் ஈடுபட்ட நிறுவனம் குறித்த முழு தகவலையும் அதிகாரிகள் வெளியிட்டால் தேவஸ்தானம் அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கும் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com