ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய தனிநபா்களுக்கு அனுமதி

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளில் இருந்து அஞ்சல் மற்றும் கூரியா் சேவை மூலம் தனிநபா்களும் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்ய தனிநபா்களுக்கு அனுமதி

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வெளிநாடுகளில் இருந்து அஞ்சல் மற்றும் கூரியா் சேவை மூலம் தனிநபா்களும் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதையடுத்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனிநபா்கள் தங்கள் அவசரப் பயன்பாட்டுக்காக ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வெளிநாடுகளில் இருந்து தபால் மற்றும் கூரியா் மூலம் இறக்குமதி செய்து கொள்ளலாம். இது தவிர வெளிநாடுகளில் உள்ள இணையவழி வா்த்தக நிறுவனங்களில் இருந்து அவற்றை வாங்கிக் கொள்ளலாம். வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை இந்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள் இறக்குமதியை பரிசுப் பொருள்கள் என்ற பிரிவின் கீழ் சுங்கத் துறை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகள் பலருக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டா்கள், செறிவூட்டிகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் கரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com