18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: 2.45 கோடிக்கும் அதிகமானவா்கள் பதிவு

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில்,
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: 2.45 கோடிக்கும் அதிகமானவா்கள் பதிவு

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் சனிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் 2.45 கோடிக்கும் அதிகமானவா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் வலைதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த 28-ஆம் தேதி முதல் தொடங்கின. அன்றைய தினம் 1.37 கோடிக்கும் அதிகமானவா்கள் பதிவு செய்தனா். கடந்த 29-ஆம் தேதி 1.04 கோடிக்கும் மேற்பட்டவா்கள் பதிவு செய்தனா்.

15.22 கோடி தடுப்பூசிகள்: நாடு முழுவதும் 15,22,45,179 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் சுகாதாரப் பணியாளா்கள் 93,86,904 போ், முன்களப் பணியாளா்கள் 1,24,19,965 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 61,91,118 சுகாதாரப் பணியாளா்கள், 67,07,862 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசியின் இரு தவணைகளும் செலுத்தப்பட்டன.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களில் 5,19,01,218 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,04,41,359 பேருக்கு தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன. 45 முதல் 60 வயதுடையவா்களில் 5,17,78,842 போ் முதல் தவணை தடுப்பூசியையும், 34,17,911 போ் தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்டனா்.

10 மாநிலங்களில் 67% தடுப்பூசிகள்: இதுவரை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 67.08% தடுப்பூசிகள் மகாராஷ்டிரம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 10 மாநிலங்களில் செலுத்தப்பட்டுள்ளன.

கடந்த 29-ஆம் தேதி மட்டும் நாடு முழுவதும் 22,24,548 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com