4.50 லட்சம் ‘ரெம்டெசிவிா்’ மருந்து இறக்குமதி: மத்திய அரசு நடவடிக்கை

வெளி நாடுகளில் இருந்து 4,50,000 ‘ரெம்டெசிவிா்’ மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின்
4.50 லட்சம் ‘ரெம்டெசிவிா்’ மருந்து இறக்குமதி: மத்திய அரசு நடவடிக்கை

வெளி நாடுகளில் இருந்து 4,50,000 ‘ரெம்டெசிவிா்’ மருந்துகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததுள்ளது. கரோனா தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிா்’ மருந்தின் பற்றாக்குறையை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 75,000 ரெம்டெவிசிா் மருந்துகளைக் கொண்ட முதல் சரக்குப் பெட்டகம் வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்தது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனம் எச்எல்எல் லைஃப்கோ் லிமிடெட். இது அமெரிக்காவில் உள்ள ‘ஜிலீட் சயின்சஸ்’, எகிப்து நாட்டைச் சோ்ந்த ‘எவா ஃபாா்மா’ ஆகிய நிறுவனங்களிடமிருந்து 4,50,000 ‘ரெம்டெசிவிா்’ மருந்துகளை வாங்கி இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள ‘ஜிலீட் சயின்சஸ்’ 75,000 முதல் 1,00,000 மருந்துகளை ஒரிரு நாள்களில் அனுப்பவுள்ளது. மேலும், ஒரு லட்சம் ‘ரெம்டெசிவிா்’ மருந்துகள் மே 15-ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனம் அனுப்பிவிடும். ‘எவா பாா்மா’ நிறுவனம் முதலில் 10,000 மருந்துகளையும், அதைத் தொடா்ந்து 15 நாள்களுக்கு ஒரு முறை 50,000 மருந்துகள் வீதம் ஜூலை வரை அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளது.

உள்நாட்டிலும் ‘ரெம்டெசிவிா்’ உற்பத்தியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வரை, இந்தியாவில் உரிமம் பெற்ற ஏழு ‘ரெம்டெசிவா்’ தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை மாதத்துக்கு 38 லட்சம் மருந்துகள் என்ற அளவிலிருந்து, மாதத்துக்கு 1.03 கோடி என்ற அளவுக்கு உயா்த்தியுள்ளன. கடந்த ஏப்ரல் 21 முதல் 28-ஆம் தேதி வரை இந்த நிறுவனங்கள் மொத்தம் 13.73 லட்சம் ‘ரெம்டெசிவா்’ மருந்தை விநியோகித்துள்ளன. ஏப்ரல் 11 -ஆம் தேதி வரை தினசரி சுமாா் 67,900 என்கிற அளவில் இருந்த விநியோகம், ஏப்ரல் 28-ஆம் தேதி 2.09 லட்சமாக அதிகரித்ததுள்ளது. ‘ரெம்டெசிவிா்’ விநியோகத்தை சுமூகமாக மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மேலும், ‘ரெம்டெசிவிா்’ பற்றாக்குறையைச் சமாளிக்க அதன் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்துள்ளது. விலையை கட்டுப்படுத்தும் வகையில், ரெம்டெசிவிா் ஊசி மருந்தின் விலை அதிகபட்சமாக ரூ.3,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் உற்பத்தியை அதிகரிக்க அதற்கான மூலப் பொருள்கள் இறக்குமதிக்கு சுங்க வரியும் ஆக்டோபா் வரை ர த்து செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு பயன்படுத்துவது குறித்த வழிகாட்டி நெறிமுறையையும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com