5 மாநில தேர்தல் நிலவரங்கள், முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

5 மாநில தேர்தல் நிலவரங்கள் மற்றும் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
5 மாநில தேர்தல் நிலவரங்கள், முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு
5 மாநில தேர்தல் நிலவரங்கள், முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு

புது தில்லி: 5 மாநில தேர்தல் நிலவரங்கள் மற்றும் முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் இடைத் தேர்தல்களின் நிலவரங்களும், முடிவுகளும் நாளை (2021, மே 2) காலை 8 மணி முதல் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து கீழ்காணும் தளங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

1. https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்களும், முடிவுகளும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும்.

2. கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள வாக்காளர் உதவி (Voter Helpline) என்ற செயலியின் வாயிலாகவும் நிலவரங்களையும், முடிவுகளையும் பொது மக்கள் அறிந்துக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரி வழங்கும் தகவல்கள், இணையதளத்திலும், செல்பேசி செயலியிலும் வெளியிடப்படும். ஒவ்வொரு நாடாளுமன்றம்/ சட்டமன்ற தொகுதிக்கான இறுதி தரவு, படிவம் 20-ல் மட்டுமே பகிரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com