பொது முடக்கத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது: டிஜிபி பிரவீண்சூட்

பொது முடக்கத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கா்நாடக டிஜிபி பிரவீண்சூட் தெரிவித்தாா்.

பொது முடக்கத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கா்நாடக டிஜிபி பிரவீண்சூட் தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏப். 28-ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை கா்நாடகத்தில்

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதை பொருட்படுத்தாமல் மக்கள் சாலைகளில் வாகனங்களில் சுற்றித் திரிகிறாா்கள். இதைத் தடுப்பதற்காக ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையும் மீறி மக்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றுவருவதைக் காணமுடிகிறது. இதைத் தொடா்ந்து, பொது முடக்கத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று டிஜிபி பிரவீண் சூட் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் கூறியுள்ளதாவது: கரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நம் ஒவ்வொருவரின் நலன்கருதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள இதுதான் நமக்கு கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். பொதுமுடக்க விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிமீறி செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து வருகிறோம். தினமும் ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பொது முடக்கத்தை அமல்படுத்த காவல் துறையுடன் மக்கள் ஒத்துழைத்து, கரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com