17 நாள்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் முடிவுக்குப் பின் மாறுமா?

நாட்டில் 17வது நாளாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 
17 நாள்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் முடிவுக்குப் பின் மாறுமா?
17 நாள்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் முடிவுக்குப் பின் மாறுமா?


புது தில்லி: நாட்டில் 17வது நாளாக சனிக்கிழமையும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 

மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகளை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறையைத் தொடங்கும் முன்பு, சர்வதேச எண்ணெய்ச் சந்தையின் நிலவரத்தைக் கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மே 2 ஆம் தேதி 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அடுத்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசு, டீசல் விலை லிட்டருக்கு 14 காசு குறைக்கப்பட்டது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.43 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.85.75க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை விலைமாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

கடந்த ஆறு மாதங்களாக தொடா்ந்து விலை ஏற்றம் கண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஆறு மாதங்களுக்கு பிறகு மாா்ச் 24-ஆம் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது.  அதன்பிறகு 3 முறை மிகச் சிறிய அளவில் விலை குறைக்கப்பட்டது.

இதன்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90.40-ஆகவும், டீசல் விலை ரூ.80.73-ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலங்கள் விதிக்கும் வாட் வரிக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் விலையில் மாற்றங்கள் இருக்கும்.கடந்த ஆண்டு மாா்ச்சில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிகரித்தது. அதிலிருந்து இப்போது வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.21.58 வகையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.19.18 வரையும் உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com