அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தடுப்பூசிகள்: மகாராஷ்டிரம் வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் சமமாக கிடைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசிகள் சமமாக கிடைக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே வெள்ளிக்கிழமை கூறியது:

மகாராஷ்டிரத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தினசரி சீராக நடைபெறுவதற்கு தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியுள்ளது. இம்மாநிலத்துக்கு மே மாதத்தில் 18 லட்சம் தடுப்பு மருந்து குப்பிகள் வரை விநியோகிக்கப்படும் என்று தடுப்பூசி தயாரிப்பாளா்கள் தெரிவித்துள்ளனா். இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தடுப்பூசி மையம் மட்டும் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. போதிய தடுப்பூசிகள் கிடைக்காதவரை, அதற்கான பயனாளிகளின் எண்ணிக்கையை மாநில அரசால் அதிகரிக்க முடியாது.

தடுப்பூசி உற்பத்தியாளா்கள் உற்பத்தி செய்யும் மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை மத்திய அரசு வாங்கவுள்ளது. எஞ்சிய 50 சதவீத தடுப்பூசிகளை மாநில அரசுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால் எந்த மாநிலங்களுக்கு அந்த தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வி. இதுகுறித்தும் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்பதே அதன் பொருள். எனவே அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக தடுப்பூசிகள் கிடைக்கும் விதமாக மத்திய அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com