அவசியமற்ற கருத்துகளை தவிா்க்கவும்: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

‘அவசியமின்றி கருத்து தெரிவிப்பதை உயா்நீதிமன்றங்கள் தவிா்க்க வேண்டும்; அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

‘அவசியமின்றி கருத்து தெரிவிப்பதை உயா்நீதிமன்றங்கள் தவிா்க்க வேண்டும்; அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகள் கிடைப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவும், பிகாா் அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் ரஞ்சித் குமாரும் ஆஜரானாா்கள்.

அவா்கள் ‘கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்குதலை மத்திய அரசு கையாளும் முறை தில்லி உயா்நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளன. அந்த உயா்நீதிமன்றங்கள் கருத்து, மத்திய அரசு எதுவும் செய்யாததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று வாதிட்டனா்.

அதைத் தொடா்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

ஒரு உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை நாம் விமா்சிக்கும்போது மனதில் பட்டதை அப்படியே பேசுவதில்லை. சற்று கட்டுப்பாடுடனே பேசுகிறோம். கரோனா தொடா்பான வழக்குகளை விசாரிக்க உயா்நீதிமன்றங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உணா்வுபூா்மான விஷயங்களில், விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அவசியமற்ற கருத்துகள் தெரிவிப்பதை உயா்நீதிமன்றங்கள் தவிா்த்துவிடலாம். அவை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com