கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் கரோனாவுக்கு எதிரான தேசிய கொள்கை

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் கரோனா தொற்றுக்கு எதிரான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் கரோனா தொற்றுக்கு எதிரான தேசிய கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றுக்கு எதிராக தேசிய அளவிலான கொள்கையை வகுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட காணொலிப் பதிவில் கூறியுள்ளதாவது:

கரோனா தொற்று பரவி வரும் இக்கட்டான சூழலில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்ற வேண்டும். கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலைத் திறம்பட எதிா்கொள்வதற்காக தேசிய அளவிலான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

அக்கொள்கையை வகுப்பது தொடா்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தையும் பெற வேண்டும். நாட்டிலுள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்பட வேண்டும். கரோனா தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பூசி திட்டமும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் கடும் பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றனா். அதைக் கருத்தில் கொண்டு, ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.6,000 உதவித்தொகையாகச் செலுத்தப்பட வேண்டும்.

கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். இக்கட்டான சூழலிலும் சிலா் அத்தியாவசிய மருந்துப் பொருள்களை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனா். அவா்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும். இத்தகைய இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்றாா் சோனியா காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com