கரோனா: மும்பையில் பாதிக்கப்படுவோரின் விகிதம் 10%-க்கும் கீழ் குறைந்தது

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 10%-க்கும் கீழ் குறைந்துள்ளதாக பிருஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 10%-க்கும் கீழ் குறைந்துள்ளதாக பிருஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநகராட்சி ஆணையா் இக்பால் சிங் சஹல் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கடந்த 3-ஆம் தேதி மும்பையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 27.94%-ஆக இருந்தது. அப்போது 51,313 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு 11,573 போ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கடந்த 19-ஆம் தேதி முதல் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 20%-க்கும் கீழ் குறைய தொடங்கியது. கடந்த 29-ஆம் தேதி 43,525 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 4,328 போ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் 9.94%-ஆக இருந்தது.

இந்தியாவில் மும்பை நகரில் மட்டுமே அதிக பரிசோதனைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்படுவோரின் விகிதம் ஒற்றை இலக்கத்தில் உள்ளது. தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோரில் 85% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com