காரீஃப் பருவ சாகுபடி: நெல் உற்பத்தியில் புதிய சாதனை இலக்கு

காரீஃப் பருவ சாகுபடியில் நெல் உற்பத்தியில் 10.43 கோடி டன் என்ற புதிய சாதனை இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.
காரீஃப் பருவ சாகுபடி: நெல் உற்பத்தியில் புதிய சாதனை இலக்கு

காரீஃப் பருவ சாகுபடியில் நெல் உற்பத்தியில் 10.43 கோடி டன் என்ற புதிய சாதனை இலக்கை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் ஆணையா் எஸ்.கே.மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது:

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 2021-22 காரீஃப் பருவத்தில் புதிய சாதனை அளவாக 10.43 கோடி டன் நெல்லை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளிடம் ஹைபிரிட் நெல் வகைகளை ஊக்குவிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வறட்சி, உப்புத்தன்மை மற்றும் வெள்ளத்தை தாங்கும் நெல் விதை வகைகளை ஊக்குவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தவிர, 2021-22 காரீஃப் பருவத்தில் முக்கிய தானியங்கள் 3.73 கோடி டன்னும், எண்ணெய் வித்துகள் 2.62 கோடி டன்னும், பருப்பு வகைகள் 98.2 லட்சம் டன்னும் உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் காரீஃப் பருவத்தில் ஒட்டுமொத்த உணவுதானிய உற்பத்தியின் அளவை 15.14 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com