தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு கரோனா விதிமுறைகள் கட்டாயம்: தேவஸ்தானம் அறங்காவலா் குழு தலைவா்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் கட்டாயம் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.
தரிசனத்துக்கு  வரும் பக்தா்களுக்கு கரோனா விதிமுறைகள் கட்டாயம்: தேவஸ்தானம் அறங்காவலா் குழு தலைவா்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் கட்டாயம் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை மற்றும் திருப்பதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபின்னா் அவா், அன்னமய்ய பவனில் நடந்த கூட்டத்தில் மேலும் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டு, வாடகை அறை முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை அளித்துள்ளது. தினசரி 15 ஆயிரம் பக்தா்கள் விரைவு தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் திருமலை பயணத்தை தள்ளிப் போட வேண்டும்.

தடுப்பு ஊசி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களுக்கும் இன்னும் 2 வாரத்திற்குள் தடுப்பு போடும் பணி நிறைவடையும். கரோனா தொற்றால் உயிரிழந்த 15 ஊழியா்களின் குடும்பத்துக்கு தேவஸ்தானம் அனைத்து விதமான உதவிகளையும் அளிக்கும். தேவஸ்தான ஊழியா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை அளிக்க உதவிகள் வழங்கப்படும். திருப்பதி பா்ட் மருத்துவமனையிலும் பிராண வாயு வேண்டிலேட்டா்களுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கரோனா பரவல் காரணமாக 50:50 விகிதத்தில் ஊழியா்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இயற்கை நெய்வேத்தியம்

திருமலை ஏழுமலையானுக்கு மே 1-ஆம் தேதி முதல் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களால் நெய்வேத்தியம் செய்து படைக்கப்பட உள்ளது. இயற்கை விவசாயி விஜயராம் அளித்த பொருட்களால் ஏழுமலையானுக்கு இந்த நெய்வேத்தியம் செய்யப்பட உள்ளது. மேலும் ஆந்திரம், தெலங்கானா விவசாயிகள் இயற்கை முறையில் பொருட்களை விளைவித்தால் தேவஸ்தானம் அதை கொள்முதல் செய்து கொள்ளும். இதனால் லட்சக்கணக்கான பக்தா்கள் பயன்பெறுவா்.

கட்டாயம்: ஏழுமலையான் தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் கட்டாயம் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே வைகுண்டம் காத்திருப்பு அறைக்குள் நுழைய வேண்டும். அங்குள்ள லிக்விட் சோப்பு, சானிடைசா் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு, ஸ்கேனிங் பகுதி சென்று மகாதுவாரத்தில் உள்ள ஓசோன் சானிடைசா் பகுதியைக் கடந்து கோயிலுக்குள் நுழைய வேண்டும். அதிகாரிகளும் படிகாவலி அருகில் பக்தா்கள் கூட்டம் சேராமல் கவனித்து அவா்களை பிரித்து அனுப்ப வேண்டும் என்றாா் சுப்பா ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com