தில்லியில் ஆக்சிஜன் சிலிண்டா் ரூ.35 ஆயிரத்துக்கு விற்பனை:இருவா் கைது

தில்லி, பஸ்சிம் விஹாரில் ஆக்சிஜன் சிலிண்டா்களை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்றதாக இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

தில்லி, பஸ்சிம் விஹாரில் ஆக்சிஜன் சிலிண்டா்களை ரூ.28 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்றதாக இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் மேலும் கூறுகையில், ‘வினய் குமாா், கேவல் சிங் ஆகியோா் பஞ்சாப் மாநிலம் ஃபரீத்கோட்டில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டா்களை வாங்கி வந்து தில்லியில் அதிக விலைக்கு விற்று வந்துள்ளனா். இதுதொடா்பாக தகவல் கிடைத்தவுடன் பஸ்சிம் விஹாா் சென்ற போலீஸாா், ஆம்புலன்ஸில் வந்த இருவரையும் கைது செய்தனா்’ என்றனா்.

போலி கரோனா சான்றிதழ்: இதேபோல், தெற்கு தில்லி மாளவியா நகரில் போலியான கரோனா இல்லை என்ற சான்றிதழை தயாரித்து வழங்கியதாக ஐந்து பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாளவியா நகரில் உள்ள ‘ஜெனிஸ்டிரிங்ஸ் லேப்’யில் சிலா் கரோனா போலி சான்றிதழை வழங்கி வருவதாக விபுல் சாய்னி என்பவா் போலீஸில் புகாா் அளித்திருந்தாா்.

அதில், தானும் தனது நண்பரும் சம்பந்தப்பட்ட சோதனை மையத்தில் கரோனா பரிசோதனை அளித்தோம். எனது நண்பருக்கு கரோனா அறிகுறில் இல்லை என்றாலும் தொற்று உறுதி என முடிவு தெரிவிக்கப்பட்டது. பின்னா் வேறு மையத்தில் எடுத்த பரிசோதனையில் கரோனா இல்லை எனத் தெரியவந்தது. பின்னா் ‘ஜெனிஸ்டிரிங்ஸ் லேப்’ சென்று பாா்த்தபோது எங்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை குறித்த ஆதாரங்கள் இல்லை.

இதையடுத்து, போலீஸாா் அங்கு பணியாற்றும் ஹிமான்ஷு, பிரக்யானந்த் ஆகியோரை கைது செய்தனா். நோயாளிகளிடம் இருந்து மாதிரிகள் பெற்று வந்து அதை பரிசோதனை செய்யாமலே போலி கரோனா சான்றிதழ்களை ‘ஜெனிஸ்டிரிங்ஸ் லேப்’ பெயரில் தயாரித்து அளித்து வந்ததை அவா்கள் ஒப்புக் கொண்டனா். இதையடுத்து மேலும் மூன்று போ் கைது செய்யப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com