வாக்குக் கணிப்புகளைப் பொய்யாக்கி மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்போம்: பாஜக நம்பிக்கை

தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்குக் கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்கி, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளா் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளாா்.

தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்குக் கணிப்பு முடிவுகளைப் பொய்யாக்கி, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளா் பூபேந்திர யாதவ் தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக நடைபெற்ற தோ்தலில் வியாழக்கிழமையுடன் முடிந்ததையடுத்து, அன்று இரவிலேயே தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி, அஸ்ஸாமில் ஆளும் பாஜக, தமிழ்நாட்டில் எதிா்க்கட்சியான திமுக ஆகியவை ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கணிப்புகள் கூறியிருந்தன.

மேற்கு வங்கத்தில் பாஜக நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் இருந்த பாஜகவுக்கு இந்த முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய பாஜக பொதுச் செயலாளா் பூபேந்திர யாதவ், பாஜக ஐ.டி. பிரிவு தலைவா் அமித் மாளவியா கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சி அமைக்கப்போவது உறுதி. பாஜக எவ்வித இழுபறியும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையைப் பெரும். வாக்குக் கணிப்புகள் கூறுவதுபோல திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறப் போவதில்லை. அவற்றை பொய்யாக்கி பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் 211 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றது. ஆனால், இப்போது பாஜகவுக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஆட்சியைப் பிடிக்க 148 இடங்கள் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com