
கோப்புப்படம்
இந்தியாவில் இதுவரை 15.68 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்ட அறிக்கையில், ‘ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை நாடு முழுவதும் 15,68,16,031 பயனாளிகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சனிக்கிழமை (மே1) 11 மாநிலங்களில் 18-45 வயதுடைய 86,023 பயனாளிகளுக்கு தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டது. மொத்தத்தில் அன்று ஒரு நாளில் 18,26,219 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...