18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: முதல் நாளில் 86,000 பேருக்கு செலுத்தப்பட்டது

18 முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல்நாளில் 86,023 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: முதல் நாளில் 86,000 பேருக்கு செலுத்தப்பட்டது

18 முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் முதல்நாளில் 86,023 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு, சத்தீஸ்கா், தில்லி, குஜராத், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 11 மாநிலங்களில் திட்டம் தொடங்கப்பட்டது. மற்றமாநிலங்களில் போதுமான இருப்பு இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் தொடங்கப்படவில்லை. வழக்கம்போல 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி திட்டம் முதலில் மருத்துவ, சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டது. அதையடுத்து, மூத்த குடிமக்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. பின்னா் இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், அடுத்தகட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

திட்டம் தொடங்கப்பட்டு 106-ஆவது நாளான மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. எனினும், பல மாநிலங்களில் போதிய இருப்பு இல்லாததால் அதனை செயல்படுத்த முடியவில்லை. செயல்படுத்திய மாநிலங்களிலும் கூட பதிவு செய்தவா்களைவிட மிகக்குறைந்த அளவிலான நபா்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com