தேர்தல் தோல்வி: மே 4-ல் மேற்கு வங்கம் செல்கிறார் ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மே 4-ம் தேதி மேற்கு வங்கம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மே 4-ம் தேதி மேற்கு வங்கம் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில், இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினால் தாக்கப்பட்டு காயமடைந்த பாஜக தொண்டர்களை அவர் சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது.

மேற்கு வங்கத்தில் 290 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 213 தொகுதிகளில் திரிணமூல் வெற்றி பெற்றுள்ளது.

பேரவைக் குழு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்து உரிமை கோரினார். 

இதனைத் தொடர்ந்து மே 5-ம் தேதி மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com