இந்தியா உள்பட 7 நாடுகளுக்கு இஸ்ரேல் பயணத் தடை

இந்தியா, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்று இஸ்ரேல் பயணத் தடை விதித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் செல்ல வேண்டாம் என்று இஸ்ரேல் பயணத் தடை விதித்துள்ளது. இந்நாடுகளில் கரோனா தொற்று பரவல் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் அலுவலகம், சுகாதாரத் துறை அமைச்சகம் இணைந்து ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மே 3 முதல் மே 16-ஆம் தேதி வரை இந்தியா, தென்னாப்பிரிக்கா, மெக்ஸிகோ, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலியா்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டவா்கள் மேற்கண்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். ஆனால், அவா்கள் அந்த நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்களாக இருக்க வேண்டும்.

அந்த 8 நாடுகளில் இருந்து கடந்த இரு வாரங்களில் இஸ்ரேல் வந்தவா்கள் தங்களை 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். மே 3-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com