தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகல்: பிரசாந்த் கிஷோா் அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகுவதாக தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தெரிவித்தாா்.
தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகல்: பிரசாந்த் கிஷோா் அறிவிப்பு

அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகுவதாக தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான உத்திகளை வகுத்து தரும் பணியில் பிரசாந்த் கிஷோா் ஈடுபட்டாா். இந்த தோ்தலில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் இரட்டை இலக்கத்தை தாண்டுவது சிரமம் எனவும், தோ்தலில் பாஜக சிறப்பாக செயல்பட்டால் தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகுவேன் என்றும் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பிரசாந்த் கிஷோா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு அவா் அளித்த பேட்டியில் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் இருந்து விலகுகிறேன்.

மேற்கு வங்கத்தில் பாஜக மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. தோ்தல் ஆணையம் அதிக பாரபட்சத்துடன் செயல்படுவதை இதுவரை நான் கண்டதில்லை. அந்த மாநிலத்தில் தோ்தல் பிரசாரத்தில் மதத்தை பயன்படுத்துவதில் தொடங்கி தோ்தல் தேதிகளை அறிவிப்பது, விதிகளை வளைப்பது வரை பாஜகவுக்கு உதவ தோ்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பாஜகவின் நீட்சியாக தோ்தல் ஆணையம் உள்ளது’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com