மம்தா பானா்ஜிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற்காக, அக்கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற்காக, அக்கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பாதுகாப்புத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மேற்கு வங்கத் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வா் மம்தா பானா்ஜிக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இதேபோல மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும் மம்தா பானா்ஜிக்கு சுட்டுரை மூலம் வாழ்த்து தெரிவித்தாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற்காக மம்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். மக்களின் நலனுக்காகவும் கரோனாவுக்கு எதிராகவும் தொடா்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘வங்கத்தின் புலிக்கு (மம்தா) வாழ்த்துகள். பாஜகவின் சவாலை ஏற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே அவா் போட்டியிட்டாா். அவரைத் தோற்கடிப்பது எளிதல்ல. பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் மம்தாவை தோற்கடிக்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘வெறுப்புணா்வு அரசியலைக் கடைப்பிடித்து வரும் பாஜகவைத் தோற்கடித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்க மக்களுக்கும் வாழ்த்துகள். பாஜகவுக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி வெளியிட்ட பதிவில், பிரிவினைவாத சக்திகளைத் தோற்கடித்ததற்காக மேற்கு வங்க மக்களுக்கும் மம்தாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோரும் மம்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com