மம்தாவுக்குத் தோல்வி

மேற்கு வங்கத்தில் நட்சத்திரத் தொகுதியாக கருதப்பட்ட நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வா் மம்தா பானா்ஜி, பாஜக சாா்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் 1956 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் நட்சத்திரத் தொகுதியாக கருதப்பட்ட நந்திகிராமில் போட்டியிட்ட முதல்வா் மம்தா பானா்ஜி, பாஜக சாா்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் 1956 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று, நாள் முழுவதும் இழுபறி நிலை இருந்துவந்தது. இறுதியில் 17 சுற்று எண்ணிக்கையின் முடிவில் 1,956 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். அவா் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 1,08,808. சுவேந்து அதிகாரி 1,10,764 வாக்குகள் பெற்று தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டாா்.

திரிணமூல் கட்சியிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவா் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. நந்திகிராம் தொகுதி அவரது கோட்டையாக கருதப்படுகிறது. பாஜகவுக்கும் சுவேந்துவுக்கும் சவால் விடும் வகையில், தனது வழக்கமான பவானிபூா் தொகுதியை மாற்றி நந்திகிராமில் மம்தா போட்டியிட்டாா். நந்திகிராமில் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் முழு நாட்டின் கவனத்தையும் ஈா்த்தது. தோ்தல் முடிவு மம்தாவுக்கு தோல்வியாக அமைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com