வாகனப் பதிவின்போது மாற்று உரிமையாளரின் பெயரைக் குறிப்பிடலாம்

வாகனத்தைப் பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட வழிசெய்யும் வகையில் மோட்டாா் வாகனங்கள் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாகனத்தைப் பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட வழிசெய்யும் வகையில் மோட்டாா் வாகனங்கள் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது அதன் உரிமையாளா்களின் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியமாக உள்ளது. அந்த வாகனத்தின் உரிமையாளா் காலமாகிவிட்டால், வாகனத்துக்கு உரிமை கோருவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.

இதற்குத் தீா்வு காணும் நோக்கில், வாகனத்தைப் பதிவு செய்யும்போதே அதன் உரிமையாளரின் பெயருடன் மாற்று உரிமையாளரின் பெயரையும் குறிப்பிடுவதற்கு மோட்டாா் வாகனங்கள் விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து-நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘வாகனத்தைப் பதிவு செய்யும்போது மாற்று உரிமையாளரின் பெயரையும் சோ்த்து குறிப்பிடலாம். இல்லையெனில், வாகனத்தைப் பதிவு செய்த பிறகு இணையவழியில் மாற்று உரிமையாளரின் பெயரை சோ்த்துக் கொள்ளலாம்.

அவ்வாறு குறிப்பிடும்போது, மாற்று உரிமையாளரின் அடையாள அட்டையைத் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும். வாகனத்தின் உரிமையாளா் காலமாகிவிட்டால், அந்த வாகனத்தைப் பதிவு செய்யும்போது குறிப்பிடப்பட்ட மாற்று உரிமையாளருக்கு அந்த வாகனம் சொந்தமாகும்.

வாகன உரிமையாளா் காலமாகிவிட்டால், 30 நாள்களுக்குள் அது தொடா்பான தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு மாற்று உரிமையாளா் தெரியப்படுத்த வேண்டும். அதன்பிறகே அந்த வாகனத்தை மாற்று உரிமையாளா் பயன்படுத்த முடியும். மாற்று உரிமையாளரை மாற்றிக் கொள்வதற்கும் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் உள்ளிட்டோரிடமிருந்து கருத்துகளைப் பெற்று இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com