வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இன்று பிரிட்டன் பயணம்

ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை பிரிட்டன் செல்கிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை பிரிட்டன் செல்கிறாா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மே 3 முதல் 6-ஆம் தேதி வரை பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அவரின் வருகை தொடா்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும் எஸ்.ஜெய்சங்கா், அந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் டொமினிக் ராப்பை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். அப்போது கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் பிரிட்டனும் இணைந்து செயல்படுவது தொடா்பாக இருவரும் கலந்தாலோசிக்கவுள்ளனா்.

ஜி7 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த மாதம் பிரிட்டனின் காா்ன்வால் பகுதியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமா் மோடிக்கு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com