‘ஃபைஸா் கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெற இந்திய அரசுடன் ஆலோசனை’

அமெரிக்காவின் ஃபைஸா், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஃபைஸா்
‘ஃபைஸா் கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெற இந்திய அரசுடன் ஆலோசனை’

புது தில்லி: அமெரிக்காவின் ஃபைஸா், ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிக்கு விரைந்து ஒப்புதல் பெறுவது குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஃபைஸா் நிறுவனத் தலைவா் ஆல்பா்ட் போா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் இந்திய பிரிவு பணியாளா்களுக்கு அவா் எழுதிய கடிதத்தில் கூறியது:

கரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசிகள் கிடைப்பதன் முக்கியத்துவத்தை ஃபைஸா் நிறுவனம் அறிந்து வைத்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்தியாவில் ஃபைஸா் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பல மாதங்களுக்கு முன்னா் விண்ணப்பம் அளித்தும் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்த ஒப்புதலை விரைந்து வழங்குவது தொடா்பாக இந்திய அரசுடன் ஃபைஸா் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியாவுக்கு அரசு ஒப்பந்தங்கள் மூலமாக மட்டுமே ஃபைஸா் நிறுவன தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அந்த நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com