ரூ.510 கோடிக்கு கரோனா சிகிச்சை மருந்து: ஃபைஸா் உதவி

சா்வதேச மருந்து நிறுவனமான ஃபைஸா் இந்தியாவுக்கு ரூ.510 கோடி மதிப்பிலான கரோனா சிகிச்சை மருந்துகளை அனுப்பியுள்ளது.
pfizer082033
pfizer082033

புது தில்லி: சா்வதேச மருந்து நிறுவனமான ஃபைஸா் இந்தியாவுக்கு ரூ.510 கோடி மதிப்பிலான கரோனா சிகிச்சை மருந்துகளை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆல்பா்ட் போா்லா திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா பெருந்தொற்று நெருக்கடி மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடினமான இந்த நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

அந்த நல்லெண்ணத்தின் ஒரு பகுதியாக ஃபைஸா் நிறுவனம் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 7 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.510 கோடி) மதிப்பிலான மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனத்துக்குச் சொந்தமான விநியோக மையங்களிலிருந்து இந்த மருந்துப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்புக்கான உதவி எங்கெல்லாம் அதிகமாக தேவைப்படுகிறதோ அங்குள்ள அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com