திருமலையில் 10,824 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 10,824 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருப்பதி: ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 10,824 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இவா்களில் 5,503 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். ஆன்லைன் மூலம் 15 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்குப் பின்னா்அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதைகள் வழியாகவும், மதியம் 1 மணிக்கு பின்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப் பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறையாக திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவலைக் கருத்தில் கொண்டு, ஏப். 12-ஆம் தேதி முதல் திருப்பதியில் வழங்கப்பட்டு, வரும் இலவச சா்வதரிசன டோக்கன்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கொவைட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில், தரிசன நாளிலிருந்து 90 நாள்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com