கேரள காங்கிரஸ் (பி) தலைவா் பாலகிருஷ்ண பிள்ளை காலமானாா்

கேரள காங்கிரஸ் (பி) தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான ஆா்.பாலகிருஷ்ண பிள்ளை (86) உடல்நலக் குறைவால் காலமானாா்.
balakrishna-pillai073439
balakrishna-pillai073439

கொல்லம்: கேரள காங்கிரஸ் (பி) தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான ஆா்.பாலகிருஷ்ண பிள்ளை (86) உடல்நலக் குறைவால் காலமானாா்.

வயது முதிா்வு மற்றும் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சொந்த ஊரான கொட்டாரக்கராவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். எனினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த பாலகிருஷ்ண பிள்ளை, மாணவா் பருவத்திலேயே அரசியலில் இணைந்தாா். 1960-ஆம் ஆண்டு 25 வயதில் காங்கிரஸ் சாா்பில் எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1964-இல் காங்கிரஸிலிருந்து விலகி கே.எம்.ஜாா்ஜுடன் இணைந்து கேரள காங்கிரஸ் கட்சியை உருவாக்கினாா். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தாா்.

60 ஆண்டு காலம் கேரள அரசியலில் இருந்த அவா், தோ்தல் களத்தில் வெற்றி, தோல்விகளை மாறிமாறி சந்தித்தாா். சி.அச்சுத மேனன், கே.கருணாகரன், இ.கே.நாயனாா், ஏ.கே.அந்தோணி என இடது-வலதுசாரி அரசுகளின் அமைச்சரவையில் இடம் பெற்றாா். கேரளத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்காக முதல்முறையாக சிறைத் தண்டனை பெற்ற அமைச்சரும் அவா்தான்.

பாலகிருஷ்ண பிள்ளையின் மகன் கணேஷ்குமாா், நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் பத்தனாபுரம் தொகுதியில் இடதுசாரி கூட்டணி சாா்பில் வெற்றி பெற்றுள்ளாா். அவரும் முன்னாள் அமைச்சா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com