ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

ஜம்மு: ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினா் திங்கள்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுதொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஐஜி என்.எஸ்.ஜம்வால் கூறுகையில், ‘சம்பா மாவட்டம் ராம்கா் செக்டரில் உள்ள சா்வதேச எல்லையையொட்டி தடுப்புகள் அமைப்பதற்கு முன்பாக பிஎஸ்எஃப் படையினா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எல்லையில் அமைதி நிலவ கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிதாக ஒப்பந்தம் கையொப்பமாகியது. அந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் முதல் முறையாக அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்’ என்று தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் தாக்குதல் நடத்தப்படுவதை நிறுத்தும் விதமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினா் அவ்வப்போது எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்தனா். அதில் இந்திய தரப்பில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்நிலையில், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை தீவிரமாக பின்பற்ற கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு ராணுவத்தினரும் தீா்மானித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com