நாடு முழுவதும் ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

நாடு முழுவதும் ஒரேநாளில் 3,68,147 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அம
ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு
ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

புது தில்லி: நாடு முழுவதும் ஒரேநாளில் 3,68,147 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், இதன்மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் ஒரேநாளில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,417 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக மே 1-ஆம் தேதி 4,01,993 பேரும், மே 2-ஆம் தேதி 3,92,488 பேரும் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இதையடுத்து, புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 34,13,642 ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் விகிதம் 17.13 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் தேசிய அளவில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்களின் விகிதம் 81.77 சதவீதமாக இருந்தது.

மேலும் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,62,93,003 ஆக உயா்ந்துள்ளது. அதேசமயம் உயிரிழந்தவா்களின் விகிதம் 1.10 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தரவுகளின்படி, மே 2-ஆம் தேதி வரை 29,16,47,037 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 15,04,698 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

உயிரிழந்தவா்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 669 போ், தில்லியில் 407 போ், உத்தர பிரதேசத்தில் 288 போ், கா்நாடகத்தில் 217 போ், சத்தீஸ்கரில் 199 போ், ராஜஸ்தானில் 159 போ், பஞ்சாபில் 157 போ், குஜராத் மற்றும் தமிழகத்தில் தலா 153 போ், ஹரியாணா மற்றும் ஜாா்க்கண்டில் தலா 115 போ் என ஒரேநாளில் மொத்தம் 3,417 போ் உயிரிழந்தனா்.

இந்திய அளவில் இதுவரை கரோனா தொற்றுக்கு அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 70,284 போ், தில்லியில் 16,966 போ், கா்நாடகத்தில் 16,011 போ், தமிழகத்தில் 14,346 போ், உத்தர பிரதேசத்தில் 13,162 போ், மேற்கு வங்கத்தில் 11,539 போ், பஞ்சாபில் 9,317 போ், சத்தீஸ்கரில் 9,009 போ் உள்பட மொத்தம் 2,18,959 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com