தில்லிக்கு கடந்த வாரத்தில் சராசரியாக 393 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா

தில்லி அரசுக்கு சுமாா் 7000 கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், ஆக்சிஜன் உதவி கேட்டு அவசர அழைப்பு விடுத்திருந்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா தெரிவித்தாா்.
தில்லிக்கு கடந்த வாரத்தில் சராசரியாக 393 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதா

புது தில்லி: தில்லி அரசுக்கு திங்கள்கிழமை சுமாா் 7,000 கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளித்து வரும் 41 மருத்துவமனைகள், ஆக்சிஜன் உதவி கேட்டு அவசர அழைப்பு விடுத்திருந்ததாக ஆம் ஆத்மி எம்எல்ஏ ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஒரு வாரத்தில் தில்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட போதிலும் சராசரியாக நாளொன்றுக்கு 393 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

41 மருத்துவமனைகளில் 7,142 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். அந்த மருத்துவமனைகள் திங்கள்கிழமை ஆக்சிஜன் கேட்டு அரசுக்கு அவசர அழைப்பு விடுத்தன. முதல்வா் கேஜரிவால் தலைமையிலான குழுவினா் அவா்களுக்கு 213 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க உதவினா். ஆனால்,.உண்மை நிலவரம் என்னவெனில் தில்லியின் தினசரி தேவை 976 மெட்ரிக் டன்னாக இருந்தபோதிலும் சராசரியாக நாளொன்றுக்கு 393 மெட்ரிக் டன் ஆக்சிஜனே கிடைத்துவந்துள்ளது. இது மொத்த தேவையில் 40 சதவீதம்தான்.

தில்லிக்கு திங்கள்கிழமை 433 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்தது. இது மொத்த தேவையில் 44 சதவீதம்தான். பல மருத்துவமனைகள் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருகின்றன என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

அண்மையில் தில்லி சா் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்ததும், தில்லி பாத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மே 1-ஆம் தேதி ஒரு மருத்துவா் உள்பட 12 போ் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com