பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசும், டீசல் விலை 18 காசும் செவ்வாய்க்கிழமை உயா்த்தப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

புது தில்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசும், டீசல் விலை 18 காசும் செவ்வாய்க்கிழமை உயா்த்தப்பட்டது.

இதுகுறித்து பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததையடுத்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசும், டீசல் விலை லிட்டருக்கு 18 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 18 நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போதுதான் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயா்வையடுத்து, தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.90.40-லிருந்து ரூ.90.55-ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று, டீசல் விலையும் ரூ.80.73-லிருந்து ரூ.80.91-ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.92.43-லிருந்து 92.55-ஆகவும், டீசல் விலை 85.75-லிருந்து 85.90-ஆகவும் அதிகரித்துள்ளன.

பிற மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல் விலையில் அதிகரிப்பு இருக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் அந்த அறிவிக்கையில் தெரிவித்துள்ளன.

ஐந்து மாநில தோ்தலை கருத்தில் கொண்டு கடந்த 18 நாள்களாக பெட்ரோல் டீசல் விலை உயா்த்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோ்தல் முடிவுகள் வெளியானவுடன் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com